Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பாரஸ் ஹெல்த்கேர் ரூ.652.5 கோடி திரட்டல்

பாரஸ் ஹெல்த்கேர் ரூ.652.5 கோடி திரட்டல்

புதிய பங்குகள் மூலம் திரட்டப்படும் தொகையைக் கடனைத் திருப்பிச் செலுத்தப் பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

பாரஸ் ஹெல்த் பிராண்டின் கீழ் மருத்துவமனைகளை நடத்தும் பாரஸ் ஹெல்த்கேர் நிறுவனம், ரூ.1,450 கோடி மதிப்பிலான ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) முன்னதாக, முன்னணி முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.652.5 கோடி திரட்டியுள்ளது.

பங்குச் சந்தைகளில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின்படி, 39 முதலீட்டு நிறுவனங்களுக்கு ஒரு பங்கு ரூ.693 விலையில் 94.16 லட்சம் பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்டுகள், பிளாக்ராக் உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.

இந்த ஐபிஓ இன்று (அக்.21) முதல் தொடங்கி, 23-ம் தேதி நிறைவடைகிறது. ஒரு பங்கின் விலை ரூ.660 முதல் ரூ.693 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.500 கோடி மதிப்பிலான புதிய பங்குகளும், ரூ.950 கோடி மதிப்பிலான பழைய பங்குகளின் விற்பனையும் இடம்பெறுகின்றன.

புதிய பங்குகள் மூலம் திரட்டப்படும் தொகையைக் கடனைத் திருப்பிச் செலுத்தப் பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 5 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் 8 மருத்துவமனைகளை இந்நிறுவனம் நடத்தி வருகிறது. இதன் பங்குகள் வரும் அக்.28-ம் தேதி பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி
லாரி ஓட்டுநர்கள் போராட்டம் எதிரொலி: இத்தாலியில் பாஸ்தா உற்பத்தி முடக்கம்
அடுத்த செய்தி
உக்ரைனுக்கு ஓகே சொன்ன ஜப்பான்! கோழி இறைச்சி, முட்டைகளுக்கு அனுமதி

தொடர்புடைய செய்திகள்